இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி, வேனில் பயணித்தபடியே 34 நாடுகளைச் சுற்றிப் பார்த்துள்ளனர்.
இங்கிலாந்தின் சௌதம்டன் நகரைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்னைத் என்பவர், தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் நாடு நாடாக சுற்றி வருகிறார். வேன் ஒன்றை பிரத்யேகமாக வீடு போல மாற்றி கடந்த மூன்றரை ஆண்டுகளாக வசித்து வரும் அந்த குடும்பம், இதுவரை 34 நாடுகளை சுற்றி வந்துள்ளனர். தற்போது இந்தியாவில் இருக்கும் அந்த குடும்பத்தினர், இன்னும் பல்வேறு நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவிக்கின்றனர். வீடு போன்ற அந்த வேனில், படுக்கை அறை, சமையல் அறை, நூலகம், கழிவறை என சகல வசதிகளும் உள்ளன. வேனில் வசித்தபடியே மூன்றரை ஆண்டுகளாக உலகம் சுற்றி வரும் இவர்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.