ஃபேஸ்புக்கின் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கு தலைவரான ஹ்யூகோ பாரோ

ஃபேஸ்புக்கின் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கு தலைவரான ஹ்யூகோ பாரோ
ஃபேஸ்புக்கின் விர்ச்சுவல் ரியாலிட்டிக்கு தலைவரான ஹ்யூகோ பாரோ

கூகுளின் முன்னாள் நிர்வாகியும் ஜியோமியின் துணைத்தலைவராக இருக்கும் ஹ்யூகோ பாரோ தற்போது ஃபேஸ்புக்கின் விர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவுக்கு தலைமை தாங்கவிருக்கிறார்.

ஃபேஸ்புக்கின் விர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவுக்கு ஹ்யூகோ பாரோ தலைமை தாங்கப் போவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். ஜியோமியின் துணைத்தலைவராக இருக்கும் ஹூகோ பாராவை நீண்ட நாட்களாகவே தனக்கு தெரியும் என்று மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். மேலும் அவர் ஜியோமியில் இணைந்ததில் இருந்து ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் பல புதுமைகளை புகுத்தி பல லட்சக்கணக்கான மக்களிடம் ஸ்மார்ட்போனை கொண்டு சேர்த்தவர் என்றும் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். ஹ்யூகோ பாரோ இந்தியா, மியான்மர் மற்றும் பிரேசில் உட்பட பல நாடுகளில் ஜியோமியை மிகப் பெரிய அளவில் விற்பனை செய்ய உறுதுணையாக இருந்தவர் என்றும் மார்க் ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார். ஃபேஸ்புக் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி மிக உறுதுணையாக இருக்கும் என்றும் அதை சரியாக வழிநடத்த ஹ்யூகோ பாரோ போன்ற திறமையான நிர்வாகி வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹ்யூகோ பாரோ ஜியோமியிலிருந்து வெளியேறப் போவதாக சில நாட்களுக்கு முன்பு கூறியுருந்தார். மேலும் தனது உடல்நிலை பாதித்துள்ளதாகவும் புதிய வேலைக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com