பாகிஸ்தானில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூட்யூப் சேவை தற்காலிக முடக்கம்!

பாகிஸ்தானில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூட்யூப் சேவை தற்காலிக முடக்கம்!

பாகிஸ்தானில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், யூட்யூப் சேவை தற்காலிக முடக்கம்!
Published on

பாகிஸ்தானில் ஏற்பட்ட மத கலவரத்தை அடுத்து அங்கு ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் மற்றும் யூட்யூப் சேவைகளை முடக்கியுள்ளது அரசு. அதன்படி இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மூன்று மணி வரையில் அனைத்து சமூக வலைத்தளங்களையும் முடக்குவதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையும் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இதை செய்துள்ளதாக ஆணையம் அறிவித்துள்ளாது. இருப்பினும் அதற்கான காரணம் என்ன என்பதை தொலைத்தொடர்பு ஆணையம் தெளிவுபடுத்தவில்லை. சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாக பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன. 

தடை செய்யபட்ட கட்சியின் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதர் வெளியேற வேண்டும் என சொல்லி கட்சியினருடன் போராட்டம் நடத்திய நிலையில் அது தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. அதனை அடக்கும் நோக்கில் இந்த தற்காலிக தடையை சமூக வலைத்தளங்களுக்கு விதித்துள்ளதாம் அந்த நாட்டு அரசு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com