\
நீச்சல் குளத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய பேஸ்புக் நண்பர்கள்!

நீச்சல் குளத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய பேஸ்புக் நண்பர்கள்!

நீச்சல் குளத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய பேஸ்புக் நண்பர்கள்!
Published on

நீச்சல்குளத்தில் சிக்கி 3 மணி நேரம் தவித்த பெண்ணை, பேஸ்புக் நண்பர்கள் காப்பாற்றிய சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

நியூயார்க்கை சேர்ந்தவர் லெஸ்லி கான். வயது 61. இவர் தனது வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு வழக்கம் போல் குளித்துக்கொண்டிருந்தார். வெளியே வர நினைத்து ஏணியில் ஏறினார். அது உடைந்துவிட்டது. இதனால் வெளியேற முடியாமல் தவித்தார். என்ன செய்வதென்றும் தெரியவில்லை. அருகில் யாரும் இல்லாததால் பயம் ஏற்பட்டது. பல மணி நேரமாக தவித்த அவர், பிறகு பேஸ்புக் நண்பர்களின் உதவியை நாட முடிவு செய்தார். அதன்படி, அருகில் இருந்த ஐபேட்-ஐ எடுத்து, உதவி வேண்டும் என்று பேஸ்புக் குரூப்பில் பதிவிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே போலீஸுடன் சிலர் அவருக்கு வீட்டுக்கு வந்துவிட்டனர். பின்னர் அவரை நீச்சல்குளத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்ட கான், பேஸ்புக் நண்பர்களுக்கு நன்று தெரிவித்துள்ளார். பின்னர், உதவி என்று கேட்டதும் 3,981 பேர் உதவிக்கு வந்தனர் என்று மகிழ்ச்சிப் பொங்க குறிப்பிட்டுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com