ஃபேஸ்புக்கில் போலிகளுக்கு இடமில்லை !

ஃபேஸ்புக்கில் போலிகளுக்கு இடமில்லை !

ஃபேஸ்புக்கில் போலிகளுக்கு இடமில்லை !
Published on

ஃபேஸ்புக் இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை அதிகம் உபயோகிக்கும் சமூகவளைத்தளம். ஆனால் இதில் நிறைய போலி கணக்குகள் உண்டு. அதாவது ஆணாக இருப்பவர்கள் பெண் பெயரிலும், பெண்ணாக இருப்பவர்கள் ஆணாகவும் என போலி கணக்குகள் வைத்திருப்பவர்கள் தொல்லை தாங்கவே முடியாது. இதில் இன்னொரு வகையினரும் இருக்கின்றனர், அவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்கள் இல்லாமல் போலியாக ஃபேஸ்புக்கில் உலவுபவர்கள். அண்மையில் ஃபேஸ்புக் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து, பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறைகளை தூண்டும், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், போலி முகநூல் கணக்குகள் முடக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி ஃபேஸ் கணக்குகள் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் 3.4 மில்லியன் தவறான புகைப்படங்கள் நீக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com