2020 முழுவதுமே Work From Home: அறிவிப்பு வெளியிட்ட ஃபேஸ்புக், கூகுள்!

2020 முழுவதுமே Work From Home: அறிவிப்பு வெளியிட்ட ஃபேஸ்புக், கூகுள்!

2020 முழுவதுமே Work From Home: அறிவிப்பு வெளியிட்ட ஃபேஸ்புக், கூகுள்!
Published on

ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன.

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலகநாடுகள் போராடி வருகின்றன. சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை கொரோனாவால்
பீதியடைந்துள்ளன. உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவைக்
கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கச் சொல்லி வலியுறுத்துகின்றன.

பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளன. ஊரடங்கு வரையிலும் இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைக் நிறுவனங்கள் கடைபிடிக்கும் எனத் தெரிகிறது. ஆனால் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன.

ஜூன் 1ம் தேதி வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என கூகுள் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வாய்ப்பு இருப்பவர்கள் இந்த ஆண்டு முழுவதுமே வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. அதேபோல் ஜூலை 6வரை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கி இருந்த ஃபேஸ்புக், பணியாளர்கள் விரும்பினால் 2020 முழுவதும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com