ஆஸ்திரேலிய தேர்தலில் தோற்றுப்போன கருத்துக் கணிப்புகள் !

ஆஸ்திரேலிய தேர்தலில் தோற்றுப்போன கருத்துக் கணிப்புகள் !
ஆஸ்திரேலிய தேர்தலில் தோற்றுப்போன கருத்துக் கணிப்புகள் !

இந்தியாவில் நேற்றோடு மக்களவை தேர்தல் திருவிழா முடிவடைந்த நிலையில், நாடே மே 23 ஆம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. இதில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முடிவுகள் வெளியாகின. பலரும், இப்போது இந்தக் கருத்துக் கணிப்புகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலும், அங்கு தோற்றுப்போன வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கெனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 9 மாதங்களாக ஸ்காட் மோரிசன் பிரதமராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 151 இடங்களைக் கொண்ட அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மே மாதம் 18 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 76 இடங்களில் வென்றாக வேண்டும். ஆஸ்திரேலியாவில் ஓட்டு போடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 1 கோடியே 64 லட்சம் பேர் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர். 18 வயது நிறைவு அடைந்தவர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதனால் வாக்குப்பதிவு விறுவிறுவென நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை வாக்குப் பதிவு முடிந்த பின்பு. அன்றையே தினமே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் நாட்டின் கிழக்கு பகுதியில் வாக்குப் பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 52 சதவீதத்தினரின் ஆதரவும், ஆளும் லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கு 48 சதவீதத்தினரின் ஆதரவும் உள்ளது என தகவல் வெளியானது.

இந்நிலையில் கருத்துகணிப்புக்களை எல்லாம் தவிடு பொடியாக்கி பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிலும் துல்லியம் இல்லை என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com