அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்கா முடிவு

அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்கா முடிவு
அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்கா முடிவு

அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான ஆணை கையெழுத்தாக உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்

உலகிலேயே அமெரிக்கா கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்துவரும் நிலையில், அந்நாட்டிலேயே மிக அதிகமாக நியூயார்க் பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. கொரோனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான ஆணை கையெழுத்தாக உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ''கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதலில் இருந்து அமெரிக்க குடிமக்களின் பணிகளை காக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஆணை கையெழுத்தாக உள்ளது'' என  தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com