லத்தீன் அமெரிக்காவில் வேகமாகப் பரவும் கொரோனா.. 50 லட்சத்தை எட்டிய பாதிப்பு..!
உலகையே பதற்றத்தில் வைத்துள்ள கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லத்தீன் அமெரிக்காவில் 50 லட்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில், கொலம்பியா, மெக்சிகோ போன்ற நாடுகளில் அரசு நிர்வாகங்கள் நோய்த் தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தியுள்ளன.
இங்கு நெருக்கமாக வாழும் மக்களின் வறுமையும் நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தடையாக இருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொலம்பியாவில் திங்களன்று 10 ஆயிரத்துக்கும் அதிகான மக்கள் தொற்று அறிகுறியுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
லத்தீன் அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். பிரேசில், மெக்சிகோ இரு நாடுகளிலும் இறப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் பொருளாதாரத்தைச் சீரமைக்கும் வகையில் வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் தொற்றைக் கட்டுக்குள்வைக்க சுகாதாரத்துறை கடுமையாகப் போராடிவருகிறது.