பூமியே அழிந்தாலும் சூரியன் உள்ளவரை வாழும் உயிரினம்
பூமியில் உயிரினங்கள் அனைத்து அழிந்தாலும், சூரிய குடும்பத்தின் கோள்கள் அனைத்தும் அழிந்தாலும், சூரியன் அழியும் வரை உயிருடன் இருக்கும் உயிரினம் ஒன்று உள்ளது. அந்த உயிரினம் தான் ’நீர் கரடி’.
பார்ப்பதற்கு கரடி போல உள்ளதால், இது நீர்கரடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவை பொதுவாக கடலின் அடிப்பகுதியிலும், பனிப்பிரதேசங்களிலும் உயிர் வாழ்கின்றன. இவை மனிதர்களால் தாங்கக்கூடிய கதீர்வீச்சு அளவில், 1000 மடங்குக்கு அதிகமான கதிர்வீச்சை தாங்கிக் கொள்ளும் அபூர்வ சக்தி பெற்றவை.
நீர்கரடி என்று அழைக்கப்படும் இவ்வுயிரினத்தின் அறிவியல் பெயர் டார்டிகிரேட் என்பதாகும். இது அதிகபட்சமாக 0.5 மில்லிமீட்டர் அளவே வளரக்கூடிய நுண்ணுயிரி. இதற்கு எட்டு கால்கள் உள்ளன. நீரும், உணவும் இல்லாமல் 30 வருடங்கள் வாழக்கூடியது. 150 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் வாழக்கூடியது. காற்றில்லாத, உரைய வைக்ககூடிய விண்வெளியிலும் உயிர்வாழுக்கூடியது. பூமி முழுவதும் அழிந்த பிறகும் வாழக்கூடிய உயிரினம் நீர் கரடி. நீர் கரடியுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் மனிதன் இவ்வளவு அறிவியல் வளர்ச்சியடைந்தும் பேரழிவின் போது தன்னை காத்துக் கொள்ள முடியாத நிலையில் தான் உள்ளான்.