விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது.
பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது. லக்சம்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தத் தீர்ப்பில் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியன் கடந்த 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்தது. . தற்போது, தடை விலகியதால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் வங்கிப் பணம் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாடுகளில் அந்த இயக்கம் சுதந்திரமாகச் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
ஐரோப்பிய யூனியனின் இந்த தீர்ப்புக்கு தமிழக தலைவர்கள், நெடுமாறன், திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.