பயணிகள் விமானத்தை வழிமறித்து தரையிறக்கிய விவகாரம்; பெலாரஸ் மீது புதிய தடைகள் விதிப்பு

பயணிகள் விமானத்தை வழிமறித்து தரையிறக்கிய விவகாரம்; பெலாரஸ் மீது புதிய தடைகள் விதிப்பு
பயணிகள் விமானத்தை வழிமறித்து தரையிறக்கிய விவகாரம்; பெலாரஸ் மீது புதிய தடைகள் விதிப்பு

போர் விமானத்தை கொண்டு பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ் நாடு மீது புதிய தடைகளை விதித்துள்ளது ஐரோப்பிய யூனியன். 

கிரீஸ் நாட்டிலிருந்து லிதுவேனியா நாட்டிற்கு பயணிகள் விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்தபோது, பெலாரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று நடுவானில், பயணிகள் விமானத்தை வழிமறித்து பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் வலுக்கட்டாயமாக தரையிறக்கச் செய்தது. அரசுக்கு எதிராக  விமர்சனம் செய்து வந்த பத்திரிகையாளர் ரோமன் புரோட்டசெவிஸ் என்பவர் விமானத்தில் பயணிக்கும் தகவலறிந்த பெலாரஸ் அரசு, அவரை கைது செய்யத்தான் இப்படி ஒரு பகீர் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.  

பெலாரஸ் நாட்டின் இந்த  அதிர்ச்சிகரமான நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன்டெர் லியன், இந்த சட்டவிரோத செயலுக்கு பெலாரஸ் பலத்த பின்விளைவுகளை சந்திக்கும் என எச்சரித்துள்ளார். இந்நிலையில், பத்திரிகையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் பற்றி ஐரோப்பிய யூனியன் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் மேற்கொண்டது. இதன் முடிவில், பத்திரிகையாளர் கைது விவகாரம் மற்றும் விமானம் வழிமறிக்கப்பட்டு, தரையிறங்க செய்தது ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பெலாரஸ் நாடு மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்து உள்ளது.

அதன்படி, ஐரோப்பிய யூனியன் வான்வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. லித்துவேனியா நாடு முன்பே பெலாரஸ் நாட்டுக்கு எதிராக அந்நாட்டு விமானங்கள் தங்களுடைய வான் எல்லை வழியே பறப்பதற்கான தடையை விதித்து விட்டது. இதேபோன்று இங்கிலாந்து அரசு, பெலாரஸ் நாட்டுக்கான தேசிய விமான அனுமதிக்கு தற்காலிக தடை விதித்து உள்ளது. இதுதவிர, இங்கிலாந்து விமானங்கள் பெலாரஸ் வான்வழியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com