காஸா மீது இஸ்ரேல் கொத்து குண்டுகளை வீசியதா? - மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

காஸா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஐரோப்பாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்pt web

இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் மீது EURO-MED மனித உரிமை அமைப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. போர் தொடங்கிய அக்டோபர் 7ஆம் தேதி முதல் இதுவரை காஸா பகுதிகள் மீது 25,000 டன் வெடிகுண்டுகளை இஸ்ரேல் ராணுவம் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போர்
இஸ்ரேல்- ஹமாஸ் போர்pt web

இது இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்கத்தை காட்டிலும் இரண்டு முறை சக்திவாய்ந்தது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. காஸா பகுதியில் உள்ள 12 ஆயிரம் இலக்குகளை குறிவைத்தே இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை மேற்கொண்டு வருவதாகவும், அதுமட்டுமின்றி சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகளை காஸா நகரங்கள் மீது வீசி தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com