ரஷ்ய அதிபர் புடினின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

ரஷ்ய அதிபர் புடினின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்
ரஷ்ய அதிபர் புடினின் சொத்துகளை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

ரஷ்ய அதிபர் புடின், வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் அண்டை நாடான ரஷ்யா, அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்குள்ள இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால், இரு பக்கமும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனங்கள் தெரிவித்து பொருளாதாட தடை விதித்து வருகிறது. இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு உக்ரைன் ராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின், வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இருவரது சொத்துக்களை முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com