ஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்

ஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்

ஆண்- பெண் இருவருக்கும் சம ஊதியம்: அரபு அமீரகத்தில் இன்று முதல் அமல்
Published on

ஐக்கிய அரபு அமீரகத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆண், பெண் இரு பாலருக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்கான நடைமுறைகள் இன்று முதல் தொடங்குகின்றன. இதனை தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.

இதுதொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ள அதிபர் ஷேக் கலிபா பின் சையத் அல் நயான், வேலைவாய்ப்புச் சந்தையின் நிலைமைக்கு ஏற்ப ஒரே பணியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊதியம் வழங்குவதில் பாலின சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதற்கான முயற்சிகள் ஆகஸ்ட் 25 ம் தேதி முதல் அரபு அமீரகத்தின் மனிதவளத்துறை தொடங்கியது. இந்தப் புதிய சட்டத்திருத்தங்கள் பாலின சமத்துவத்திற்கான அடுத்தக்கட்ட நகர்வாக நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது.

"அரபு அமீரகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக எடுத்துவைக்கும் புதிய காலடி " எனக் கூறும் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் அன்வர் கார்ஷ், "சமத்துவம் மற்றும் நீதித்துறையில் இந்தச் சட்டம் மாற்றங்களை உருவாக்கும்" எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com