தந்தையின் விந்தணுவை எடுத்து மனைவி மூலம் குழந்தை பெற்ற மகன்; கேஸ் போட்ட நகராட்சிக்கு ’ஷாக்’ ட்விஸ்ட்!

இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமது தந்தையின் விந்தணுவைப் பயன்படுத்தி மனைவிமூலம் குழந்தை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
model image
model imagetwitter

மாறிவரும் வாழ்வியல் சூழல்கள், உணவு முறைகள், பரவும் நோய்கள், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், பணி அமைவிடம், மனஅழுத்தம் எனப் பலவித காரணங்களால், தற்போதைய காலத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் போராலும் மக்கள்தொகை அழிந்துவருகிறது. இதையடுத்து மக்கள்தொகையை அதிகரிக்கும் வகையில் சீனா, ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, வடகொரியா உள்ளிட்ட சில நாடுகள் சலுகைகளை வழங்கிவருகின்றன.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் குழந்தைப்பேறுக்காக, பல மகப்பேறு தனியார் மருத்துவமனைகள், ஐவிஎஃப் சென்டர்கள் கொள்ளை லாபம் பார்த்துவருகின்றன. தம்பதிகளும், எப்படியாவது குழந்தை பெற்றால் போதும் என்ற மனநிலைக்குச் சென்று பணத்தை அச்செண்டர்களில் கொட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமது தந்தையின் விந்தணுவைப் பயன்படுத்தி மனைவிமூலம் குழந்தை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த அவர், பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அவருக்குக் குழந்தைப்பேறு இல்லாத நிலையில், ஐவிஎஃப் சென்டரை அணுகியுள்ளார். அவர்கள் சொன்ன ஆலோசனை மூலம் குழந்தை பெறுவதற்கு அவரிடம் அவ்வளவு தொகை இல்லை எனக் கூறப்படுகிறது.

அதாவது மனைவியை கர்ப்பமாக்க வேறு ஒருவரின் விந்தணுவைப் பெற வேண்டும் எனவும், அதற்குப் பெருமளவில் தொகை வேண்டும் எனவும் அச்செண்டர் கேட்டுள்ளது. ஆனால், அவரிடம் அந்த தொகை இல்லாததால் தனது தந்தையின் விந்தணுவுடன், தனது விந்தணுவையும் கலந்து மனைவியின் கருமுட்டைக்குள் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அந்தக் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குழந்தையின் கருத்தரிப்பு குறித்து சந்தேகமடைந்த தெற்கு யார்க்ஷயர் பகுதியின் நகராட்சி நிர்வாகமான பார்ன்ஸ்லி மெட்ரோபாலிட்டன் போரோ கவுன்சில், ’குழந்தையின் உண்மையான தந்தையை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்’ என்று வழக்கு தொடுத்துள்ளது. வழக்கு விசாரணையில் தனது தந்தையின் விந்தணுவை பயன்படுத்தியதை அந்த இளைஞரே ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து நீதிமன்றம், ‘குழந்தையின் உண்மையான தந்தை யார் என்பதை கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்தவேண்டிய அவசியமில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை, குழந்தையின் தந்தை யார் எனக் கேட்டு நகராட்சி நிர்வாகம்தான் மனுத் தாக்கல் செய்துள்ளது. இது நகராட்சி கவுன்சிலுக்கு தேவையில்லாத வேலை. குழந்தையின் பெற்றோர்கள் வழக்கு தொடுத்திருந்தால், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தலாம். மற்றபடி கவுன்சிலின் பேச்சை கேட்டு உத்தரவிட முடியாது’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com