மாவு வீசும் போட்டி : மாறி மாறி வீசிக்கொண்ட சுவாரஸ்யம்

மாவு வீசும் போட்டி : மாறி மாறி வீசிக்கொண்ட சுவாரஸ்யம்

மாவு வீசும் போட்டி : மாறி மாறி வீசிக்கொண்ட சுவாரஸ்யம்

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருவர் மீது ஒருவர் மாவு வீசும் போட்டி காண்போருக்கு சுவாரஸ்யமாக அமைந்தது.

இங்கிலாந்து நாட்டின் கோக்ஸ்ஹெல்த் எனும் பகுதியில் ஒருவர் மீது ஒருவர் மாவு வீசும் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. இதில் பெண்கள், இளைஞர்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியின் போது தங்களிடம் இருக்கும் மாவை ஒரு தட்டுகளில் ஊற்றிக்கொள்ளும் வீரர்கள், அதனை எதிரே இருக்கும் அணியினர் மீது வீசினர். அவர்களுக்கும் பதிலுக்கு எதிர் அணியினர் மீது வீசினர். 

இதில் அதிகமாக எதிரணி மீது மாவை வீசிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சுவாரஸ்யமான இந்தப் போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜெண்டில்மேன்’ எனும் தமிழ்ப்படத்தில், சில புதுமையான போட்டிகளைக் கொண்டு நகைச்சுவை காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். அதுபோல இந்தப் போட்டியும் காண்போருக்கு புதுமையான வகையில் அமைந்திருந்தது. ஆனால், இது இங்கிலாந்தில் வழக்கமாக நடைபெறும் போட்டியாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com