\
மனித குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை உயர்வு

மனித குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை உயர்வு

மனித குண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை உயர்வு
Published on: 

இங்கிலாந்தில் நடந்த மனித குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று நள்ளிரவில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. இதை ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 19 பேர் பலியாயினர். 50 பேர் படுகாயமடைந்தனர். பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதில் குழந்தைகளும் அடங்குவர். இது மனித வெடிகுண்டு தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து வரலாற்றில் மிகமோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது

இந்த குண்டு வெடிப்புக்கு அந்நாட்டு பிரதமர் தெரசா மே, இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com