\
அமெரிக்கா
அமெரிக்காமுகநூல்

அமெரிக்கா: இயற்கை எரிவாயு குழாயில் பயங்கர வெடிப்பு; கொழுந்துவிட்டு எரிந்த தீ!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இயற்கை எரிவாயு குழாயில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீப்பற்றியது.
Published on

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹவுஸ்டன் என்ற பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு குழாய் திடீரென வெடித்தது. இதன் காரணமாக வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் தீ பற்றி எரிந்தது. வானுயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்ததால், பாதுகாப்பு காரணத்திற்காக அப்பகுதி மக்கள் அவசர கதியில் வெளியேற்றப்பட்டனர்.

மின்சாரமும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்களும், தீயின் அதிகளவு வெப்பம் காரணமாக சிரமப்பட்டனர். இருப்பினும் ஒரு மணி நேர போராட்டத்திற்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அமெரிக்கா
எண்ணூர் துறைமுகம்: ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடலில் கசிந்த கச்சா எண்ணெய்

எரிவாயு குழாய் சரி செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com