\
8 லட்சம் பேரை வெளியேற்றும் ட்ரம்ப்

8 லட்சம் பேரை வெளியேற்றும் ட்ரம்ப்

8 லட்சம் பேரை வெளியேற்றும் ட்ரம்ப்
Published on

அமெரிக்காவில் வசிக்கும் 8 லட்சம் பேரை வெளியேற்றும் அதிபர் ட்ரம்ப் முடிவுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தின்போது அமெரிக்க குடியுரிமைச் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, சிறுவயதிலேயே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள், வளர்ந்த பின்னர் அமெரிக்க நிறுவனங்களில் பணி புரிவதற்கான அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கான முடிவை தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ளதாக தெரிகிறது. 

இந்த முடிவு தவறானது, கொடூரமானது என்று தனது முகநூல் பக்கத்தில் ஒபாமா பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத்தைக் கூட்டி அதிபர் ட்ரம்பின் இந்த முடிவை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிறுவயதில் அவர்கள் குடியேறியது தவறான ஒன்றாக இல்லை. எனவே, அவர்களது எதிர்காலம் பாதிக்கும் வகையில் நாம் நடந்துகொள்ள கூடாது எனவும் ஒபாமா முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com