6 விருதுகளை அள்ளிக்குவித்த 'ஸ்குவிட் கேம்' - 74- ஆவது 'எம்மி விருது'

6 விருதுகளை அள்ளிக்குவித்த 'ஸ்குவிட் கேம்' - 74- ஆவது 'எம்மி விருது'
6 விருதுகளை அள்ளிக்குவித்த 'ஸ்குவிட் கேம்' - 74- ஆவது  'எம்மி விருது'

74- ஆவது 'எம்மி விருது' வழங்கும் விழாவில், ஸ்குவிட் கேம் தொடர் விருதுகளை அள்ளிக்குவித்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், எம்மி விருதுகள் வழங்கும் விழா, கோலாகலமாக நடைபெற்றது. ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான இந்த எம்மி விருது, டிவி தொடர்கள் மற்றும் வெப் சீரிஸுக்காக மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு வழங்கப்பட்ட எம்மி விருதுகளில் 8 விருதுகளை வென்று அசத்திய 'சக்ஸஷன்' தொடர், இந்த முறையும் சிறந்த தொடருக்கான விருது உள்பட மொத்தம் 4 விருதுகளை வென்று மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே போல் சர்வதேச ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பிரபல தென் கொரிய வெப்சீரீஸான 'ஸ்குவிட் கேம்' 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகர் உள்பட 6 விருதுகளை தட்டிச் சென்றது.

சிறந்த நடிகருக்கான விருது ஸ்குவிட் கேமில் நடித்த லீ ஜுங் ஜேவுக்கு லீ ஜங்-ஜேவுக்கு வழங்கப்பட்டது. மேலும் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட 'ஸ்டேரஞ்சர் திங்ஸ்' தொடர் மொத்தம் 5 விருதுகளை வென்று குவித்துள்ளது.

- சுஜாதா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com