உலகம்
எமி விருது: ஹேண்ட்மெயிட் டேல் சிறந்த நாடகமாக தேர்வு
எமி விருது: ஹேண்ட்மெயிட் டேல் சிறந்த நாடகமாக தேர்வு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த எமி விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நாடகத்துக்கான விருதை ’தி ஹேண்ட்மெயிட் டேல்’ நாடகம் தட்டிச் சென்றது.
இந்த நாடகத்தில் நடித்த நடிகை எலிசெபத் மோஸ் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இது தவிர, சிறந்த கதையாக்கம், இயக்கம் மற்றும் துணை நடிகைகளுக்கான விருதுகளையும் ’தி ஹேண்ட்மைட் டாலே’தட்டிச் சென்றது.
’திஸ் இஸ் அஸ்’குடும்ப நாடகத்தில் நடித்த ஸ்டெர்லிங் பிரவுனுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. வெள்ளை இன குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கராக ஸ்டெர்லிங் பிரவுன் அந்நாடகத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
ஹச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த படுகொலை மர்ம தொடரான ’பிக் லிட்டில் லீஸ்’ சிறந்த தொடர் உள்பட எட்டு எமி விருதுகளை அள்ளிச் சென்றது.