ஜிம்பாப்வே புதிய அதிபர் எம்மர்சன் பதவியேற்பு

ஜிம்பாப்வே புதிய அதிபர் எம்மர்சன் பதவியேற்பு

ஜிம்பாப்வே புதிய அதிபர் எம்மர்சன் பதவியேற்பு
Published on

ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் நன்காக்வா பதவியேற்றுக் கொண்டார்.

ஜிம்பாப்வேயில் 1980-ம் ஆண்டு முதல், ஆட்சி நடத்தி வந்த ராபர்ட் முகாபே (93)வின் அதிகாரத்தை கடந்த 15-ஆம் தேதி ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டு மக்களும், முகாபேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். நெருக்கடி முற்றிய நிலையில் அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட துணை அதிபர் எமர்சன் நன்காக்வா, புதிய அதிபராக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி ஹராரே நகரில் நடந்த பதவி ஏற்பு விழாவில் அவர் புதிய அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு வயது 75. பதவி ஏற்பு விழா தலைநகர் ஹராரேவில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதன் காரணமாக ஒட்டுமொத்த தலைநகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. முகாபேவின் 37 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ந்த இந்த அரசியல் மாற்றத்தை அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி அண்டை நாடுகளும் ஆப்பிரிக்க யூனியனும் வரவேற்றுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com