உலகம்
ஸ்பைடர் மேன் போல் தாவி குழந்தையை காப்பாற்றிய மனிதர்
ஸ்பைடர் மேன் போல் தாவி குழந்தையை காப்பாற்றிய மனிதர்
பால்கனியில் தொங்கியபடி உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய மாலி நாட்டு அகதிக்கு, பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் குடியுரிமை வழங்கி கவுரவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், நான்கு மாடி கட்டிடத்தின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை ஒன்று, பிடிமான சுவரை பிடித்து தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட மாலி நாட்டு அகதி ஒருவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, ஸ்பைடர் மேன் போல அந்தக் கட்டிடத்தில் ஏறி, குழந்தையை காப்பாற்றினார். இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அவருக்கு பாராட்டுக்களை பெற்றுத் தந்தது. இந்நிலையில், அகதியான கஸ்ஸாமாவை தனது மாளிகைக்கு அழைத்து பாராட்டிய பிரான்ஸ் அதிபர் மேக்ரோன், அவருக்கு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை வழங்கி கவுரவித்துள்ளார்.