பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு

பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு
பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு

பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 20 ஆண்டுகளில் 2-வது முறையாக முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில், அதிபரின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடைய இருந்ததையைடுத்து, அந்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 2-வது முறையாக போட்டியிட்ட இமானுவேல் மேக்ரான் உட்பட 12 வேட்பாளர்கள் களம் கண்டனர். கடந்த 10-ம் தேதி நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 2-ம் சுற்று வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பிரெஞ்ச் மக்களும் தங்களது வாக்குகளை செலுத்தினர். உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இமானுவேல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் இமானுவேல் மேக்ரான் பெருவாரியான வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 20 ஆண்டுகளில் 2-வது முறையாக அதிபர் தேர்தலில் மேக்ரான் வெற்றி பெற்றதால், ஈபிள் கோபுரம் அருகே அவரது ஆதரவாளர்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

இமானுவேல் மேக்ரானுக்கு கடும் சவாலாக திகழ்ந்த மரைன் லு பென், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனிடையே வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த மேக்ரான், அடுத்த 5 ஆண்டுகளில் அனைவருக்கும் வளர்ச்சி தரும் திட்டங்களில் கவனம் செலுத்த இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 2-வது முறையாக பிரான்ஸ் அதிபராகியுள்ள இமானுவேல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்: பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com