\
துபாயில் உடல் வெப்பநிலையை அளவிடும் ஸ்மார்ட் தலைக்கவசம்!

துபாயில் உடல் வெப்பநிலையை அளவிடும் ஸ்மார்ட் தலைக்கவசம்!

துபாயில் உடல் வெப்பநிலையை அளவிடும் ஸ்மார்ட் தலைக்கவசம்!
Published on

பொதுமக்களின் உடல் வெப்பநிலையை கண்காணிக்கும் வகையில் துபாயில் காவல்துறையினருக்கு ஸ்மார்ட் தலைக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் உடலில் இருந்து வெளியாகும் வெப்பத்தின் அளவை இந்த தலைக்கவசம் கணக்கிடும். ஒருவருக்கு சராசரி அளவை விட உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் இந்த தலைக்கவசம் அணிந்திருப்பவருக்கு எச்சரிக்கை அளிக்கும்.

சீனா நிறுவனம் வடிவமைத்த இந்த ஸ்மார்ட் தலைக்கவசங்களை துபாய் காவல்துறையினர் மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் பயன்படுத்துகின்றனர். 5 மீட்டர் தொலைவில் உள்ள நபரின் உடல் வெப்பநிலையையும் கணக்கிடும் இந்த தலைக்கவசத்தால் ஒரு நிமிடத்தில் 200 பேரின் உடல் வெப்பநிலையை அறிய முடியும் என வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com