elon musks latest warning to ukraine
எலான் மஸ்க், ஜெலன்ஸ்கிஎக்ஸ் தளம்

”நான் அதை OFF செய்தால் போதும்” - உக்ரைன் அதிபருக்கு எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நெருங்கிய நண்பரும் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் ஜெலன்ஸ்கியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Published on

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ஆலோனைக் கூட்டத்தில் உக்ரைன் சார்பில் எந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை. இதனிடையே, ”எங்களுடன் ஆலோசிக்காமல் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்க முடியாது” உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்திருந்தார். தொடர்ந்து, ட்ரம்ப் மற்றும் ஜெலன்ஸ்கி சந்திப்பின்போது கூட வாக்குவாதம் நிலவியது.

இந்த நிலையில், அதிபர் ட்ரம்பின் நெருங்கிய நண்பரும் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உக்ரைன் ஜெலன்ஸ்கியை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “மோதல் தொடங்கிய சமயத்தில், நான் உக்ரைனுக்காக புதினுடன் நேரடியாக மோதத் தயாராக இருந்தேன். எனது ஸ்டார்லிங்க் இன்டர்நெட்தான் உக்ரைன் ராணுவத்தின் முதுகெலும்பாக உள்ளது. நான் அதை ஆஃப் செய்தால் உக்ரைனின் ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பும் சரிந்துவிடும். தோற்கப் போகிறோம் எனத் தெரிந்தும் உக்ரைன் பல ஆண்டுகளாகச் செய்யும் செயல்களால் பல படுகொலைகள் நடக்கிறது. உண்மையில், சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட எவரும் போரை நிறுத்தவே விரும்புவார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா நடத்திய தாக்குதலால் உக்ரைன் நாட்டின் தொலைத்தொடர்பு மொத்தமாகச் சேதமடைந்துள்ளது. அந்த நேரத்தில், உக்ரைனில் தகவல் தொடர்பு காலியானது. அப்போது எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க்தான் அவர்களுக்கு கை கொடுத்தது. அப்போது முதலே ஸ்டார்லிங் சேவையைத்தான் உக்ரைன் பயன்படுத்தி வருகிறது. ரஷ்யா தாக்குதலால் உக்ரைன் ராணுவத்தின் தகவல் தொடர்பும் முடங்கியதால், அவர்களும் ஸ்டார்லிங்க் சேவையையே இத்தனை காலம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தச் சூழலில்தான் எலான் மஸ்க் எச்சரித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.

elon musks latest warning to ukraine
ஐ.நா. சபை தீர்மானம் | ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்கா.. கலக்கத்தில் உக்ரைன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com