வாசனை திரவிய விற்பனையாளர் அவதாரம் எடுத்த எலான் மஸ்க்-ஆத்தாடி! ஒரு பாட்டில் இவ்வளவு விலையா?

வாசனை திரவிய விற்பனையாளர் அவதாரம் எடுத்த எலான் மஸ்க்-ஆத்தாடி! ஒரு பாட்டில் இவ்வளவு விலையா?
வாசனை திரவிய விற்பனையாளர் அவதாரம் எடுத்த எலான் மஸ்க்-ஆத்தாடி! ஒரு பாட்டில் இவ்வளவு விலையா?

டெஸ்லா வாகனங்கள், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் என பல வழிகளில் வருமானம் ஈட்டி உலக அளவில் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க், தற்போது தனது அடுத்த வணிகப் பயணத்தை இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கியுள்ளார்.

இந்த முறை புதிய வாசனை திரவியம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வாசனைத் திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ள எலான் மஸ்க், இந்த திரவியத்திற்கு எரிந்த முடி (பர்ன்ட் ஹேர் - Burnt Hair) என்று பெயரிட்டுள்ளார். “பூமியின் சிறந்த வாசனை!” என்று தனது இந்த வாசனை திரவியம் குறித்து தனி பதிவை வெளியிட்டுள்ளார்.

தன்னைப் போன்றவர்கள் வாசனைத் திரவிய தொழிலில் இறங்குவது தவிர்க்க முடியாதது என்று ட்விட்டரில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்திய சில நிமிடங்களிலேயே 10 ஆயிரம் பாட்டில்ல்கள் விற்று தீர்ந்துவிட்டதாக எலான் மஸ்க் அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும் தனது ட்விட்டர் பயோவை “வாசனை திரவிய விற்பனையாளன் (Perfume Salesman)” என்று மாற்றி விட்டார் எலான் மஸ்க். இந்த வாசனை திரவியத்தை கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தியும் வாங்கலாம் என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

எல்லாம் சரி! எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய இந்த வாசனைத் திரவியம் அடங்கிய ஒரு பாட்டிலின் விலை எவ்வளவு தெரியுமா? வெறும் 100 டாலர்கள் தானாம். இந்திய மதிப்பில் ஒரு பாட்டில் எரிந்த முடியின் விலை ரூ. 8,400 தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com