எலிசபெத் ராணி 70வது திருமண விழா: புகைப்படங்கள் வெளியீடு

எலிசபெத் ராணி 70வது திருமண விழா: புகைப்படங்கள் வெளியீடு

எலிசபெத் ராணி 70வது திருமண விழா: புகைப்படங்கள் வெளியீடு
Published on

பிரிட்டன் மகாராணி எலிசபெத் தனது கணவர் பிலிப்புடன் 70வது திருமண விழாவை சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்களை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. 

கடந்த 20ஆம் தேதி பிரிட்டன் மகாராணி எலிசபெத் தனது கணவர் பிலிப்புடன் தனது 70வது திருமண விழாவை குடும்ப உறுப்பினர்களுடன் எளிமையாக கொண்டாடினார். இந்த விழா, மேற்கு லண்டனில் உள்ள அரசு குடும்பத்தின் விண்ட்சோர் கேஸ்ட்ல் வீட்டில் மிக எளிமையாக நடந்ததாக பக்கிங்காம் அரண்மனை செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார். ராணியின் திருமண நாளை முன்னிட்டு ‌எவ்வித பொது நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு‌ செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எலிசபெத் மகாராணியின் 70வது திருமண விழா அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ளது. புகைப்படக்காரர் மேட் ஹோலியாக் பிரத்யேக முறையில் அந்தப் புகைப்படங்களை படம்பிடித்துள்ளார். இவ்விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர். 70வது திருமண விழாவுக்காக பிரிட்டன் மகாராணி எலிசபெத் 10 ஆயிரம் முத்துகளால் நெய்த பிரத்யேக ஆடை அணிந்து வந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com