இறந்துவிட்டதாக பிணவறைக்கு அனுப்பப்பட்ட முதியவர்.. இறுதிக்கட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

இறந்துவிட்டதாக பிணவறைக்கு அனுப்பப்பட்ட முதியவர்.. இறுதிக்கட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி!
இறந்துவிட்டதாக பிணவறைக்கு அனுப்பப்பட்ட முதியவர்.. இறுதிக்கட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி!

சீனாவின் ஷாங்காய் நகரில் முதியோர் பராமரிப்பு மையத்தில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட முதியவர் ஒருவர், பிணவறையில் உயிருடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ், ஒமைக்ரான், ஒமைக்ரான் XE என பல திரிபுகளாக மாற்றம் அடைந்து, உலகம் முழுவதும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இயல்பு நிலைக்கு திரும்ப விடாமல் ஆட்டி படைத்து வருகிறது. இதில் தற்போது ஒமைக்ரான் XE திரிபு பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், பல நாடுகளில் முகக் கவசம், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. இதில் புதிதாக கண்டறிப்பட்ட 846 பாதிப்புகளில், 727 பாதிப்புகள் ஷாங்காய் நகரில் கண்டறியப்பட்டுள்ளது. 32 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் உணவகங்கள் திறந்திருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நகரில் இறந்துவிட்டதாக கருதப்பட்ட முதியவர் ஒருவர், உயிருடன் பிணவறையில் கண்டுபிக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பூட்டோ மாவட்டத்தில் உள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்து வந்த முதியவர் ஒருவர் இறந்துவிட்டதாக நினைத்து, அந்நாட்டின் வழக்கப்படி, மஞ்சள்நிற பையில் அவரது உடலை ஜின்சாங்செங் நல மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, இறுதியாக முதியவர் உடல் இருந்த பையை திறந்து பார்த்தபோது, முதியவரின் உடலில் சிறிது அசைவு இருந்ததைக் கண்டு, மருத்துவமனையின் ஊழியர்கள் இருவரும் அதிர்ந்து போயினர். பின்னர், முதியவரின் இதயத்துடிப்பை பரிசோதனை செய்து பார்த்த ஊழியர்கள், உயிருடன் உள்ளார் என்பதை உறுதிசெய்தப் பின்னர், மூச்சுத் திணறலுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக அந்த பையிலிருந்து முதியவரை பத்திரமாக எடுத்து, உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், தற்போது அந்த முதியவரின் உடல்நிலை சீராக உள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் கடும் பாதிப்புக்குள்ளானநிலையில், இந்த சம்பவத்தால் ஷாங்காய் நகர மக்கள் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com