கால்பந்து போட்டியின்போது மோதலால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர்
காயமடைந்துள்ளனர்.
செனகல் நாட்டில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். தலைநகர் தக்காரில் உள்ள மைதானத்தில் நடந்த போட்டி ஒன்றின் போது இரு அணி ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தவிர்க்க, காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை பிரயோகித்ததாகவும், அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியும் மைதானத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தும் 8 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் கால்பந்து போட்டிகளின் போது இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் அங்கோலா நாட்டில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.