இருளில் மூழ்கிய ஈபிள் டவர்.. லாஸ்வேகாஸ் தாக்குதலுக்கு இரங்கல்!

இருளில் மூழ்கிய ஈபிள் டவர்.. லாஸ்வேகாஸ் தாக்குதலுக்கு இரங்கல்!

இருளில் மூழ்கிய ஈபிள் டவர்.. லாஸ்வேகாஸ் தாக்குதலுக்கு இரங்கல்!

லாஸ்வேகாஸ் மற்றும் மார்செய்லியில் நடைபெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேற்று இரவு ஈபிள் டவரின் வண்ண விளக்குகள் அணைக்கப்பட்டன.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைப்பெற்ற இசைக் கச்சேரியில் ஸ்டீபன் பெடாக் என்பவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 59-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதனைப்போல் ஞாயிற்றுக்கிழமை, பிரான்ஸின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மார்செய்லியின் ரயில் நிலையத்திற்கு வெளியே மர்ம மனிதன் ஒருவன் இரண்டு இளம்பெண்களைக்  கத்தியால் குத்திக் கொன்றான்.

துயரமான இந்த இரண்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் பாரிஸ் ஈபிள் டவரின் விளக்குகள் நேற்று இரவு அணைத்து வைக்கப்பட்டன. மேலும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இன்று இரவு ஈபிள் கோபுரத்தின் விளக்குகளை அணைத்து வைக்கப்படும் என்று பாரிஸ் மேயர் ஆன் ஹிலிகோ முன்பே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com