உடல் வலியை போக்கும் பாம்பு மசாஜ்.. எகிப்தில் நல்ல வரவேற்பு

உடல் வலியை போக்கும் பாம்பு மசாஜ்.. எகிப்தில் நல்ல வரவேற்பு

உடல் வலியை போக்கும் பாம்பு மசாஜ்.. எகிப்தில் நல்ல வரவேற்பு
Published on

உடல் வலியை போக்க பாம்புகளை உடம்பின்மேல் ஊர்ந்து போகவிட்டு மசாஜ் செய்யும் முறை எகிப்து நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாம்பு மசாஜ் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மசாஜ் செய்ய வருபவர்களை குப்புற படுக்க வைத்து, அவர்கள் முதுகின் மேல் மலைப் பாம்பு முதல் சாரைப் பாம்பு வரை 28 வகையான பாம்புகளை அள்ளி வைக்கின்றனர்.  அந்த பாம்புகள் அவர்களின் தலை முதல் கால் வரை ஊர்ந்து செல்கின்றன.

சுமார் 30 நிமிடம் வரை செய்யப்படும் இந்த பாம்பு மசாஜ் மூலம் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த வலியும் காணாமல் போய்விடுவதாக பயன்படுத்தியவர்கள் கூறியுள்ளனர். 

இந்த பாம்புகள் அனைத்தும் விஷமற்றவை என்றும் எனவே பயமில்லாமல் அனைத்து வயதினரும் மசாஜ் செய்து கொள்ளலாம் எனவும் கூறுகின்றனர் மசாஜ் சென்டர் ஊழியர்கள். இந்த மசாஜூக்கு இந்திய மதிப்பில் ரூ.500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com