\
16 மோப்ப நாய்களுக்கு அரசு மரியாதையுடன் பணி ஓய்வு

16 மோப்ப நாய்களுக்கு அரசு மரியாதையுடன் பணி ஓய்வு

16 மோப்ப நாய்களுக்கு அரசு மரியாதையுடன் பணி ஓய்வு
Published on: 

ஈக்வடார் நாட்டின் காவல் துறையில் பணியாற்றிய 16 மோப்ப நாய்களுக்கு அரசு மரியாதையுடன் பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஈக்வடார் நாட்டின் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, வெடிகுண்டு கண்டறிதல் போன்ற பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. கே-9 பிரிவில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த 16 மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவைகளுக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

இதில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு மோப்ப நாய்களுக்கு அரசு மரியாதையுடன் பணியிலிருந்து ஓய்வு அளித்தனர். மோப்ப நாய்களின் வீரதீர செயல்களை பாராட்டும் விதமாக அதன் பொறுப்பாளர்கள் தங்கள் நெஞ்சில் கை வைத்து மரியாதை செலுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com