அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈகுவடார்

அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈகுவடார்

அசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈகுவடார்
Published on

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈகுவடார் அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. 

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களை கடந்த 2010 ஆம் ஆண்டு இணைய தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவரை கைது செய்ய, அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. ஸ்வீடன் நாட்டில் இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கில், அசாஞ்சே கைது செய்யப்படலாம் என்றதால் அவர் லண்டன் தப்பியோடினார். இந்நிலையில் அவருக்கு ஈகுவடார் தூதரகம் அடைக்கலம் கொடுத்தது. இதையடுத்து, 2012 ஆம் ஆண்டு முதல் ஈகுவடார் தூதரகத்தின் சிறிய அறையில் வசித்து வந்த அவருக்கு ஈகுவடார் அரசு, அசாஞ்சேவிற்கு நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது. இது தொடர்பான உத்தரவை ஈகுவடார் வெளியுறவு அமைச்சர் பிறப்பித்தார். இதன் மூலம் 5 ஆண்டுகள் தூதரகத்தில் இருந்த அசாஞ்சே விரைவில் ஈகுவடார் செல்வார் என தெரிகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com