''குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் இந்தியாவில் பயணம் செய்துள்ளனர்'' - இலங்கை ராணுவ தளபதி

''குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் இந்தியாவில் பயணம் செய்துள்ளனர்'' - இலங்கை ராணுவ தளபதி
''குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் இந்தியாவில் பயணம் செய்துள்ளனர்'' - இலங்கை ராணுவ தளபதி

இலங்கை தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் சிலர் இந்தியாவின் காஷ்மீர், கேரளா, பெங்களூரு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளதாக இலங்கை ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

ஈஸ்டர் நாளன்று இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டனர். இந்த தொடர் குண்டுவெடிப்புகளின் துயரத்தில் இருந்து இலங்கை இன்னும் மீளவில்லை. குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய பயங்கரவாதிகளை நாடு முழுவதும் இலங்கை காவல் மற்றும் பாதுகாப்புப்படையினர் தேடிப்பிடித்து கைது செய்து வருகின்றனர். பலரிடம் தீவிர விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் சிலர் இந்தியாவின் காஷ்மீர், கேரளா, பெங்களூரு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளதாக இலங்கை ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். பிபிசி நேர்காணலில் பேசிய இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனாயக், ''எங்களிடம் உள்ள தற்போதைய தகவலின்படி  தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்தியாவின் காஷ்மீர், கேரளா, பெங்களூரு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளனர். அவர்கள் எதற்கு இந்தியா சென்றார்கள் என உறுதியாக தெரியாவிட்டாலும், அவர்கள் ஏதாவது பயிற்சியில் ஈடுபடவோ அல்லது மற்ற அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவோ இந்தியா சென்றிருக்க வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவ தளபதியின் கருத்துக்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், ''பயங்கரவாதிகள் குறித்து இலங்கை எந்த தகவலையும் இதுவரை எங்களிடம் பகிர்ந்துகொள்ளவில்லை. இந்தியா தொடரும் விசாரணையிலும் இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் காஷ்மீர் வந்துபோனதற்கான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. நாங்கள் விசாரணையை தொடர்ந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com