Earthquake of magnitude 6.2 strikes Chile
Earthquake at ChileX Page

தென் அமெரிக்கா: சிலியில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - வெளியான சிசிடிவி காட்சி!

தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
Published on

தென் அமெரிக்க நாடான சிலியில் கலாமா என்னும் நகருக்கு வடமேற்கில் 84 ஜிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய கண்டத்தின் நில நடுக்கவியல் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகவும் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை இந்நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 05:44 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

தென் அமெரிக்கா: சிலியில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - வெளியான சிசிடிவி காட்சி!
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்எக்ஸ் தளம்

இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறதா அல்லது உயிரிழப்புகள் இருக்கிறதா என்பது குறித்தான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம் நிலநடுக்கத்தை தொடந்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

Earthquake of magnitude 6.2 strikes Chile
சுவிட்சர்லாந்து | பெண்கள் புர்கா அணிய தடை.. அமலுக்கு வந்த சட்டம்.. மீறினால் அபராதம்!

இதற்கிடையே, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் நிலநடுக்கத்தின்போது அங்குள்ள கட்டடங்கள், பொருட்கள் அதிரும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com