earthquake
earthquake pt

மியான்மரில் இன்று காலையிலும் அதிர்ந்த நிலங்கள்... 700 ஐ தாண்டிய உயிரிழப்பு ; 1670 பேர் காயம்!

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 700 ஐ தாண்டிவிட்டது. என்ன நடந்தது காணலாம்.!
Published on

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்றைய தினம் ( 28.3.2025) பகல் 12.50 மணிக்கு மிக சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின்போது கட்டடங்கள் சாய்ந்து ஆடுவதும், அதன் பகுதிகள் உதிர்வதும் காண்போதை பதைபதைக்க வைத்துள்ளது. மேலும், வானளாவிய கட்டடங்கள் சீட்டுக்கட்டுகளை விட வேகமாக சரியும் கோர காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டடங்கள் சரியும் அதிர்ச்சியில் மக்களிடும் ஓலம், கதிகலங்க வைக்கிறது.

7.7 மற்றும் 6.4 என்ற ரிக்டர் அளவில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது .

இதேப்போல, தாய்லாந்தின் வடக்கே உள்ள சியாங் ராய் நகரிலும், வடக்கு நகரமான சியாங் மாய் நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு விமான நிலையம் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது.

இந்த நிலநடுக்கமானது அடுத்தடுத்து மூன்று முறை தொடர்ந்து ஏற்பட்டதால் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றைய தினமே 180ஐ தாண்டியது. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி 800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், நிலநடுக்கத்தால் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்துள்ளது. 1912 ஆம் ஆண்டிற்கு பிறகு மியான்மரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். அதுமட்டுமல்லாது, மியான்மரில் இன்று அதிகாலையிலும் 4.20 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வானளாவிய கட்டடங்கள் நொடியில் சரிந்து விழுந்த காட்சிகளும் வெளியாகி உள்ளது.

pm modi
pm modipt web

பிரதமர் மோடி அறிவிப்பு

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர், தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் கவலை அளிக்கின்றன. இந்தியா இயன்றவரை உதவிகளை வழங்க தயாராக உள்ளது. தயார் நிலையில் இருக்குமாறு இந்திய அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். அந்நாட்டு அரசுகளுடன் இதுகுறித்து பேசுமாறு வெளியுறவு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளேன்’ என்று எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com