\
பொதுநிகழ்ச்சியில் பெண்ணை முத்தமிட்ட அதிபர்

பொதுநிகழ்ச்சியில் பெண்ணை முத்தமிட்ட அதிபர்

பொதுநிகழ்ச்சியில் பெண்ணை முத்தமிட்ட அதிபர்
Published on

தென் கொரியா சென்றுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் துதர்தே, பொது நிகழ்ச்சியின்போது பெண் ஒருவருக்கு முத்தமிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரிய தலைநகர் சியோல் சென்றுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் துதர்தே, அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன்னை சந்தித்து இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். முன்னதாக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற துதர்தே, மேடை அருகே அமர்ந்திருந்‌த இரு பெண்களை அழைத்து அவர்களுக்கு புத்தகம் அளித்தார். 

அப்போது ஒரு பெண்ணை முத்தமிடும்படி கூறி, அவரது உதட்டில் முத்தமிட்டார். பொது நிகழ்ச்சியில் ஒரு நாட்டின் ‌அதிபர் இவ்வாறு நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முத்தமிட்டதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என துதர்தே தெரிவித்தாலும், மகளிர் அமைப்பினர் அவரது செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com