பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான வனுவாட்டுவில் உள்ள எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பும், சாம்பலும் தொடர்ந்து வெளியேறி வருவதால் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
வடக்குப் பகுதியான அம்பேவில் உள்ள எரிமலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து குமுறி வருகிறது. அந்த எரிமலையில் இருந்து தற்போது நெருப்பு குழம்புகளும், சாம்பலும் மெல்ல வெளியேறி வருவதால், அப்பகுதியில் வசித்து வந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மெவோ, பென்டேகோஸ்ட் உள்ளிட்ட தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, உணவு, குடிநீர், கூடாரம் உள்பட பொதுமக்களுக்கு தேவையான 12 டன் நிவாரணப் பொருட்களை நியூசிலாந்து அரசு அனுப்பி வைத்துள்ளது.