\
’சாகப் போகிறோம்’ : நடுவானில் போதையில் அலறிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை!

’சாகப் போகிறோம்’ : நடுவானில் போதையில் அலறிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை!

’சாகப் போகிறோம்’ : நடுவானில் போதையில் அலறிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிறை!
Published on

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது, ’நாமெல்லாம் இறக்கப் போகிறோம்’ என்று அலறி, பீதி ஏற்படுத்திய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டரில் வசிப்பவர், கிரண் ஜக்தேவ். வயது 41. இந்திய வம்சாவளி பெண்ணான இவர், வேலை விஷயமாக ஸ்பெயில் உள்ள டெனிரிஃபுக்கு சென்றுவிட்டு இங்கிலாந்து திரும்ப, ஜெட் 2 என்ற விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகவே ஆறு முதல் எட்டு பாட்டில் வரை பீர் குடித்திருந்தார். 

அதிக போதையில் விமானத்துக்குள் ஏறிய அவர், தனது கைபையில் இருந்து ஒயின் பாட்டிலை எடுத்து மேலும் குடிக்க ஆரம்பித்தார். அவர் அதிகப் போதையில் இருப்பதைக் கண்ட விமானப் பணிப்பெண்கள், தடுத்தனர். அனுமதி மறுத்தனர். அவர், விமானப் பணிப்பெண்களிடம் தொடர்ந்து மது கேட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவர் எச்சரிக்கை செய்யப்பட்டர்.

இதனால் கோபமடைந்த கிரண், எதிரில் இருந்த இருக்கையை எட்டி உதைத்து, கத்தினார். பின்னர் அழத் தொடங்கினார். இவரது செயலால் மற்றப் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது விமானத்தில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் கிரண் அவரை ஆபாசமாகத் திட்டத் தொடங்கினார்.

(கிரண் ஜக்தேவ்)

இந்நிலையில் விமானம் வளைந்து நெளிந்து சென்றது. இதைக் கண்டதும், ‘அவ்வளவுதான். இன்னும் 10 நிமிடத்தில் நாமெல்லாம் சாகப் போகி றோம்’ என்று கத்தினார் கிரண். இதனால் மற்ற பயணிகள் பீதி அடைந்தனர். இதையடுத்து விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப் பட் டார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மது போதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட கிரண் ஜக்தேவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com