பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்த டிரைவர்! கடைக்குள் பாய்ந்த கார்! 2 பேர் படுகாயம்!

பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்த டிரைவர்! கடைக்குள் பாய்ந்த கார்! 2 பேர் படுகாயம்!
பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்த டிரைவர்! கடைக்குள் பாய்ந்த கார்! 2 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை டிரைவர் மிதித்ததால், கடைக்குள் கார் பாய்ந்த விபத்தில் 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் டெம்பேயில் உள்ள சில்லறை விற்பனைக் கடைக்குள் 2 ஊழியர்கள் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென கடையின் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக் கொண்டு கார் ஒன்று உள்ளே நுழைவதைப் பார்த்ததும் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுதாரிப்பதற்குள் இருவர் மீதும் கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த மற்ற ஊழியர்கள் காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது காயமடைந்த 2 ஊழியர்களும் நலமாக உள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுரை கைது செய்தனர். ஓட்டுநர் கவனக்குறைவாக பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கடையின் கண்ணாடிக் கதவுகளை உடைத்து ஊழியர்கள் மீது கார் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com