கொரோனாவால் வந்த மாற்றம்... இங்கிலாந்தில் டிரைவ்-இன் திருமணம்..!

கொரோனாவால் வந்த மாற்றம்... இங்கிலாந்தில் டிரைவ்-இன் திருமணம்..!
கொரோனாவால் வந்த மாற்றம்... இங்கிலாந்தில் டிரைவ்-இன் திருமணம்..!

கொரோனா நெருக்கடி காரணமாக இங்கிலாந்தில் முதல் டிரைவ்-இன் திருமணம் நடந்துள்ளது. 500 ஏக்கர் மைதானத்தில் நடந்த இத்திருமணத்தை காரில் அமர்ந்தபடியே விருந்தினர்கள் கண்டுகளித்தனர்.

இங்கிலாந்தில் கொரோனா விதிமுறைகள் காரணமாக சமூக இடைவெளியுடன் ஆச்சர்யமான திருமணம் நடந்துள்ளது. எஸ்ஸக்ஸ் பகுதியில் உள்ள 500 ஏக்கர் கோல்ப் மைதானத்தில், முதல் கோவிட்-19 டிரைவ்-இன் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் 250 விருந்தினர்கள் ஆடிஸ், லேண்ட் ரோவர்ஸ் மற்றும் லம்போர்கினிஸ் போன்ற கார்களில் அமர்ந்தபடியே திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விழாவுக்குப் பிறகு, மணமகள் ரோமா போபாட் மற்றும் மணமகன் வினல் படேல் இருவரும் அந்த கோல்ஃப் மைதானத்தில் பேட்டரி வாகனத்தில் அமர்ந்தபடி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது விருந்தினர்கள் அனைவரும் ஹார்ன் மூலமாக சத்தம் எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் அவர்களின் காரிலேயே அமர்ந்தபடி திருமணத்தை பார்வையிட்டனர், அவர்கள் கழிவறைக்கு செல்ல மட்டும் காரில் இருந்து இறங்கினால் போதும். மற்றபடி அவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி காருக்கே சென்று உணவு வழங்கப்பட்டது.

நான்கு மணி நேரம் இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தின் போது, காரில் அமர்ந்துள்ள விருந்தினர்கள் ஒரு பிரத்யேக வலைத்தளத்திலிருந்து ஆர்டர் செய்யலாம். மேலும் உலகெங்கிலும் இருந்து விருந்தினர்கள் தம்பதியினரின் நேரடி காட்சிகளை வீடியோ மூலமாக கண்டுகளித்தனர்.

“நாங்கள் நினைத்த அனைத்திற்கும் சற்று வித்தியாசமாக இருந்தாலும், இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் அனைவரின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டது மறக்க முடியாத நிகழ்வு” என்று மணமக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com