\
டிரம்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள கருப்பின வீரர்கள்

டிரம்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள கருப்பின வீரர்கள்

டிரம்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள கருப்பின வீரர்கள்
Published on

கருப்பின வீரர்களுக்கு எதிரான அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளே கால்பந்து விளையாட்டு வீரர்களை போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளதாக ட்ரிவ் ப்ரீஸ் என்ற வீரர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளையினத்தவரான ட்ரிவ் ப்ரீஸ்(DREW BREES) கருப்பினத்தவர்களையும், சிறுபான்மையினரையும் டிரம்ப் ஓரங்கட்டி வருவதாக கூறினார். இந்த நடவடிக்கைளே கருப்பின வீரர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

டிரம்பின் நடவடிக்கைகளை கண்டித்து அண்மையில் அந்நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, தேசிய கால்பந்து லீக் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் முட்டி போட்டு அமர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது சர்வசேத அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com