உலகம்
ஈக்வடார் சிறையில் பயங்கர மோதல் - 58 பேர் உயிரிழப்பு
ஈக்வடார் சிறையில் பயங்கர மோதல் - 58 பேர் உயிரிழப்பு
ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் க்யாகுல் நகரில் நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலை உள்ளது. அங்குள்ள கைதிகள் இடையே போதை மருந்து கடத்தல் குழுக்கள் அதிகாரப் போட்டி கடுமையாக மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய பயங்கர சண்டையில் துப்பாக்கிகள், கத்திகள் மூலம் கைதிகள் தாக்கிக் கொண்டனர்.
இதில் 58 கைதிகள் கொல்லப்பட்ட நிலையில், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காவல்துறையினர் தலையிட்டு மோதலை கட்டுக் கொண்டு வந்தனர். ஈக்வடாரில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடந்த சிறைக் கலவரத்தில் 118 பேர் கொல்லப்பட நிலையில், மீண்டும் கலவரம் நடந்துள்ளது.