'எந்த நாட்டுடனும் போரிடும் எண்ணம் இல்லை' - சீன அதிபர் பேச்சு

'எந்த நாட்டுடனும் போரிடும் எண்ணம் இல்லை' - சீன அதிபர் பேச்சு
'எந்த நாட்டுடனும் போரிடும் எண்ணம் இல்லை' - சீன அதிபர் பேச்சு

'பிற நாடுகள் மீது அதிகாரம் செலுத்த சீனா விரும்பவில்லை' என அந்நாட்டு அதிபர் ஐ.நா. விவாத கூட்டத்தில் கூறியுள்ளார். 

இந்தியா ‌ சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் கடந்த மே மாதம் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது முதல் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த பதற்றத்தை தணிக்க பல சுற்றுகளாக ராணுவ அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவற்றில் தீர்வு காணப்படாத நிலையில், 6வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

சுமார் 14 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரண்டு ராணுவங்கள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அ‌தில் இரு தரப்பு எல்லைப்பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்புவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப்பகுதியில் தற்போதைய நிலையில் தன்னிச்சையாக மாற்றம் கொண்டுவருவதில்லை என்றும் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு ராணுவங்களுக்கிடையில் தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தவும், கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரு நாட்டு தலைவர்கள் ஒ‌ப்புக் கொண்டவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும், களத்தில் காணப்படும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ராணுவ அதிகாரிகள் அளவிலான 7ஆம் கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும் இந்த பேச்சுவார்த்தைகளில் இரண்டு தரப்பும் ராணுவத்தை விலக்கிக்கொள்வதை குறித்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.

இதற்கிடையில் மற்ற நாடுகளுடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளை பேச்சுவார்த்தை மூலம் சீனா குறைக்கும் என அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் அவரது பதிவு செய்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்த சீனா ஒருபோதும் முயற்சி செய்யாது என கூறியுள்ளார். எந்த நாட்டுடனும் பனிப்போர் நடத்துவதோ, போர் நடத்துவதோ தங்கள் குறிக்கோள் அல்ல என அவர் கூறினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com