அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சம்பளம் முழுவதையும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனை அவரது செய்தித்தொடர்பாளர் சீன் ஸ்பைசர் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை சமூக நலனுக்கு செலவழிக்கப்போவதாக டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். அதிபர் ட்ரம்ப்புக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. அமெரிக்க அதிபர்களாக இருந்த ஹெர்பெர்ட் ஹூவர் மற்றும் ஜான் கென்னடி ஆகியோரும் தங்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.