donald trump wife melania launches own cryptocurrency
ட்ரம்ப், மெலனியாஎக்ஸ் தளம்

ட்ரம்ப் மனைவி அறிமுகம் செய்த புதிய கிரிப்டோகரன்சி.. ஜெட் வேகத்தில் உயர்வு!

டொனால்டு ட்ரம்ப் மனைவி மெலனியா ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள கிரிப்டோகரன்சியின் மதிப்பு, வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே 2 ஆயிரம் சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
Published on

அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கவுள்ள டொனால்டு ட்ரம்ப் மனைவி மெலனியா ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள கிரிப்டோகரன்சியின் மதிப்பு, வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே 2 ஆயிரம் சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. டொனால்டு ட்ரம்ப் மீம் காயின் அறிமுகம் செய்யப்பட்ட மறுநாள், அவரின் மனைவி, மெலனியா ட்ரம்ப் மீம் காயினை அறிமுகப்படுத்தினார். அந்த காயின் வெளியான சில மணி நேரங்களிலேயே ட்ரம்ப் காயின் விலை சரியத் தொடங்கியது.

donald trump wife melania launches own cryptocurrency
ட்ரம்ப், மெலனியாஎக்ஸ் தளம்

முற்பகல் 11 மணிவாக்கில் மெலனியா ட்ரம்ப் மீம் காயின் ஒன்றின் விலை சுமார் 11 டாலரில் வர்த்தகமாகியது. மெலனியா ட்ரம்ப் மீம் காயினின் சந்தைமதிப்பு 1.81 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதாக COINMARKETCAP தரவுகள் கூறுகின்றன. முன்னதாக, ட்ரம்ப் வெளியிட்ட டொனால்டு ட்ரம்ப் மீம் காயின் 70 டாலர் வரை உயர்ந்திருந்தது. இந்நிலையில், அவரின் மனைவி கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தியவுடனேயே ட்ரம்ப் மீம் காயின் சரியத் தொடங்கி தற்போது 58 டாலரில் வர்த்தகமாகி வருகிறது.

ஒரு கிரிப்டோ டோக்கன் சுமார் இருபது டாலரிலிருந்து 70 டாலராக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ட்ரம்ப் காயின் சந்தை மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 14 பில்லியனுக்கும் அதிமான வர்த்தக அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் நூறு கோடி ட்ரம்ப் டாலர் டோக்கன்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிரிப்டோ கரன்சிகளில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த மீம் கிரிப்டோகரன்சி. இணையத்தில் டிரெண்டாகும் ஒரு மீமை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுவதே மீம் கிரிப்டோகரன்சியாகும். ட்ரம்பின் இந்த டாலர் ட்ரம்ப் கிரிப்டோ என்பது, ட்ரம்பின் புகழ்பெற்ற தேர்தல் முழக்கமான ஃபைட், ஃபைட், ஃபைட் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ட்ரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்தது. துப்பாக்கிக் குண்டுகள் அவரது காதை உரசிச் சென்றது. ரத்தம் வழியும்போது எழுந்த ட்ரம்ப் முதலில் உச்சரித்த வார்த்தைகள்தான் FIGHT... FIGHT... FIGHT... இதை முன்வைத்தே அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், தான் ஒரு பிசினஸ்மேன் என்பதை மீம் காயின் உருவாக்கியும் நிரூபித்திருக்கிறார்.

donald trump wife melania launches own cryptocurrency
கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் இந்தியாவுக்கு எத்தனாவது இடம்?.. முதலிடத்தில் உக்ரைன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com