\
ஈரான் போராட்டத்துக்கு அமெரிக்க அதிபர் ஆதரவு

ஈரான் போராட்டத்துக்கு அமெரிக்க அதிபர் ஆதரவு

ஈரான் போராட்டத்துக்கு அமெரிக்க அதிபர் ஆதரவு
Published on: 

ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போராட்டக்காரர்களின்
தைரியத்தை பாராட்டுவதாக கூறியுள்ளார்.

அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் கடந்த புதன்கிழமை உக்ரைன் பயணிகள் விமானத்தை அமெரிக்க போர் விமானம்
என கருதி ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர். ஈரான் அரசின் இச்செயலை கண்டித்து ஈரான் மக்கள்
மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மக்களின் தைரியத்தை பாராட்டுவதாக கூறியுள்ளார். உலகமே
உங்களை பார்த்து கொண்டிருக்கிறது என பதிவிட்டுள்ள ட்ரம்ப் போராட்டத்தை தடுப்பதாக நினைத்து மக்களை ஒடுக்கும் பணிகளை மேற்கொள்ள
வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com