மசோதாவுக்கு எதிராக நிதி | எலான் மஸ்க்கை எச்சரித்த ட்ரம்ப்!
அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்புவுக்கும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக ட்ரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இப்போது மசோதாவை எதிர்த்த சில சட்டமியற்றுபவர்கள், மசோதாவுக்கு வாக்களித்த குடியரசுக் கட்சியினருக்கு எதிராக நிதி திரட்டும்படி மஸ்க்கிடம் கோரியிருந்தனர். இதையடுத்து, ”எலான் மஸ்க் அப்படிச் செய்தால் மிகக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று ட்ரம்ப் என எச்சரித்துள்ளார். மேலும் அவர், “எலான் மஸ்க் மரியாதையற்றவர். அவருடனான உறவு முடிந்துவிட்டது. அவரது உறவைச் சரிசெய்ய எந்த விருப்பமும் இல்லை. அவருடன் பேச எந்த எண்ணமு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.